Saturday, August 15, 2009

ஆண்டவன் யார்?

பிறப்பில் வருவது யாரெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பினில் வருவது யாரெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
வாழ்வினில் வருவது யாரெனக் கேட்டேன்
வாழ்ந்து பாரென இறைவன் பணித்தான்
ஆண்டவனே நீ யாரெனக் கேட்டேன்
அனுபவம் என்பதே நான் தான் என்றான்.

- கண்ணதாசன்.

No comments:

Post a Comment